Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    *இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட விளையாட்டு சாதனங்களுக்கு, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கும் மத்திய அரசின் முடிவால் இந்தியாவில் விளையாட்டுத்துறை மேம்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறினார்.
    *ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 192 ரன்கள் வித்தியாசத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியை வீழ்த்தியது.
    *2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் செனேகல் 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.
    *பிசிசிஐயின் அடுத்த ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் வரையில், தேசிய கிரிக்கெட் அகாதெமி உறுப்பினர் பொறுப்பில் திலிப் வெங்சர்கார் நீடிப்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
    *பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இம்முறை, ஜே.பி.டுமினி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர், ஏஞ்ஜெலோ மேத்யூஸ், மிட்செல் ஜான்சன், காலின் மன்ரோ, ஆதில் ரஷீத் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    *கொல்கத்தாவில் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள 25 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் 3 முறை ஒலிம்பிக் சாம்பியனான எத்தியோபியாவின் கெனெனிஸா பெகேலே, கென்யாவின் ஃப்ளாரன்ஸ் ஜெபெட் கிப்லகட் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai