Enable Javscript for better performance
பயிற்சி ஆட்டம்: முதல் நாளில் இலங்கை 411/6- Dinamani

சுடச்சுட

    
    NIROSHAN

    பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை முதல் நாளில் 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது.
     இரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பிசிசிஐ தலைவர் அணி பந்துவீச தீர்மானித்தது.
     இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணியில் சமரவிக்ரமா, கருணாரத்னே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிவந்த இந்த ஜோடியில் இருவருமே அரைசதம் கடந்தனர். இந்நிலையில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்திருந்த கருணாரத்னே காயம் காரணமாக விலகினார்.
     அவரைத் தொடர்ந்து லாஹிரு திரிமானி களத்துக்கு வர, மறுமுனையில் 13 பவுண்டரிகளுடன் 74 ரன்களை எட்டி சமரவிக்ரமா ஆட்டமிழந்தார். அவர் அவேஷ் கான் பந்துவீச்சில் தன்மய் அகர்வாலிடம் கேட்ச் ஆனார்.
     அவரை அடுத்து மேத்யூஸ் களம் காண, இலங்கை அணி 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தின் 34-ஆவது ஓவரில் திரிமானி ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த அவர், சக்úஸனா பந்துவீச்சில் ஜீவன்ஜோத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
     இதையடுத்து ஆட வந்த கேப்டன் தினேஷ் சண்டிமல், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக விலகினார். அவரை தொடர்ந்து களத்துக்கு வந்த நிரோஷன் டிக்வெல்லா அதிரடி காட்டி அரைசதம் கடந்தார்.
     இந்நிலையில், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்திருந்த மேத்யூஸýம் காயம் காரணமாக விலக, டாசன் சனகா களம் புகுந்தார்.
     அவரை 2 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பியது சக்úஸனா-ஜீவன்ஜோத் கூட்டணி. தொடர்ந்து வந்த தில்ருவன் பெரேரா, டிக்வெல்லாவுடன் நிலைத்து ஆடினார்.
     எனினும், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்த அவர் அரைசதத்தை நெருங்கி ஆட்டமிழந்தார். சந்தீப் வாரியர் பந்துவீச்சில் அபிஷேக்கிடம் கேட்ச் ஆனார் அவர்.
     அடுத்து வந்த தனஞ்ஜய டி சில்வா 10, பின்னர் வந்த ரங்கனா ஹெராத் 3 ரன்களில் ஆட்டமிழக்க, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 411 ரன்களை எட்டியது இலங்கை.
     டிக்வெல்லா 13 பவுண்டரிகள் உள்பட 73 ரன்களுடனும், ரோஷன் சில்வா 5 பவுண்டரிகள் உள்பட 36 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
     பிசிசிஐ தலைவர் லெவன் தரப்பில் சந்தீப் வாரியர், ஆகாஷ் பந்தாரி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.


     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai