புணே ஓபன்: 2-ஆவது தகுதிச்சுற்றில் பன்தியா
By புணே, | Published on : 12th November 2017 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புணே ஓபன் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் உள்ளூர் வீரர்களான சித்தார்த் பன்தியா, ஜெயேஷ் பங்கலியா உள்ளிட்டோர் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
முன்னதாக, பன்தியா தன்னை எதிர்த்து ஆடிய சித்தார்த் விஷ்வகர்மாவை 7-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். பங்காலியா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தக்ஷினேஸ்வர் சுரேஷை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சித்தார்த் ராவத், 6-4, 7-6 (1) என்ற செட் கணக்கில் துருவ் சுனீஷையும், போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடம் வகிக்கும் என்.விஜய் சுந்தர் பிரசாந்த், 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அன்வித் பெந்த்ரேவை வீழ்த்தினர்.
இதேபோல், சந்திரில், லக்ஷித் சூட், ரஞ்சித் விராலி முருகேசன் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் ஆவர். கஜகஸ்தானைச் சேர்ந்த திமுர் கபிபுலின், ஜப்பான் வீரர் நாகாகவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது தகுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.