Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: ஒடிஸா நிதானம்- Dinamani

சுடச்சுட

    
    RANJI

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒடிஸா 3-ஆவது நாள் இறுதியில் 101 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் அடித்துள்ளது.
     தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இன்னும் 244 ரன்கள் தேவையுள்ள நிலையில், அந்த அணியின் வசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.
     இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட் செய்தது. அதிகபட்சமாக முரளி விஜய் 140, விஜய் சங்கர் 100, பாபா அபராஜித் 109 ரன்கள் எடுத்தனர். 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தமிழக அணி டிக்ளேர் செய்தது.
     இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஒடிஸா, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆவது நாள் ஆட்டத்தை அந்த அணியின் சந்தீப் பட்நாயக் 15, நட்ராஜ் பெஹரா 17 ரன்களுடன் தொடங்கினர்.
     அவர்கள் இருவருமே அரைசதம் கடந்த நிலையில், சந்தீப் பட்நாயக் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் மகேஷ் பந்துவீச்சில் கெüஷிக் காந்தியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
     அடுத்து வந்த கேப்டன் கோவிந்த் 29 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அபினவ் முகுந்திடம் கேட்சாகி பெவிலியன் திரும்பினார்.
     அவரைத் தொடர்ந்து வந்த சேனாபதி 4 ரன்கள் எடுத்து, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டாகி நடையைக் கட்டினார். இதனிடையே, சதத்தை நெருங்கிய நட்ராஜ் பெஹராவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் ரஹீல் ஷா. நட்ராஜ் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 91 ரன்களுக்கு வீழ்ந்தார்.
     இவ்வாறாக, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஒடிஸா 101 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. ஷாந்தனு மிஸ்ரா 37, சமந்த்ரே 44 ரன்களுடன் ஆடி வருகின்றனர். தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 2, ரஹீல் ஷா, மகேஷ் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai