Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இந்த சீசன் முதல் ஒரு அணியின் களமாடும் வீரர்களில் 6 பேர் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற விதியின் மூலம் உள்நாட்டு வீரர்கள் மேம்படுவார்கள் என்று போட்டிக்கான பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
     ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் சந்திக்கவுள்ள மியான்மரை எளிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என்று இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறினார்.
     உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி தனது 17-ஆவது பட்டத்தை வென்றார்.
     இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேக் பால் காயம் அடைந்துள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் புதிதாக வேகப்பந்துவீச்சாளரை சேர்க்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
     2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட டுனீசியா, மொராக்கோ அணிகள் தகுதிபெற்றன.
     இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்க, 8 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai