Enable Javscript for better performance
தேசிய மல்யுத்தம்: சுஷில் குமார் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மல்யுத்தம்: சுஷில் குமார் பங்கேற்பு

    By  புது தில்லி,  |   Published on : 13th November 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sk

    தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இந்திய வீரர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார். இவர் இப்போட்டியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
     டிபிலிஸி, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி மேற்கொண்டிருந்த சுஷில் குமார், இதற்காக இந்தியா திரும்பினார். அத்துடன், 74 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தேசிய ஜூனியர் சாம்பியன் தினேஷை வீழ்த்தி, தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை உறுதி செய்தார்.
     இதுகுறித்து அவர் கூறுகையில், "உடல் மற்றும் மனதளவில் தற்போது முழுதகுதியுடன் இருக்கும் நான், போட்டிகளில் திருப்தியுடன் பங்கேற்று வருகிறேன்' என்றார். இதனிடையே, 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் மற்றொரு வீரரான பிரவீண் ராணா, தேர்வுப் போட்டியில் பங்கேற்கவில்லை.
     இந்நிலையில், தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார். எனினும், இப்போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோர் பங்கேற்கின்றனர். காயம் காரணமாக பபிதா குமாரி பங்கேற்கவில்லை.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai