Enable Javscript for better performance
பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை பயிற்சி ஆட்டம் "டிரா'- Dinamani

சுடச்சுட

    

    பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை பயிற்சி ஆட்டம் "டிரா'

    By  கொல்கத்தா,  |   Published on : 13th November 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cric

    பிசிசிஐ தலைவர் லெவன்-இலங்கை அணிகள் இடையேயான 2 நாள் பயிற்சி ஆட்டம் "டிரா'-வில் முடிந்தது.
     இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பேட் செய்த பிசிசிஐ தலைவர் லெவன் அணி 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.
     வலுவான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியின் 4 வீரர்கள் அரைசதம் கடந்தது அந்த அணிக்கு உத்வேகமாக இருக்கும்.
     இரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பிசிசிஐ தலைவர் அணி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணியில் சமரவிக்ரமா அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். கருணாரத்னே 50, மேத்யூஸ் 54 ரன்களுக்கு ரிடையர்ட் ஹர்ட் ஆகி விலகினர்.
     திரிமானி 17 ரன்களில் ஆட்டமிழக்க, சண்டிமல் 29 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் ஆனார். சனகா 2, தனஞ்ஜயா 10, ஹெராத் 3 ரன்களில் வீழ்ந்தனர். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது இலங்கை. நிரோஷன் டிக்வெல்லா 73, ரோஷன் சில்வா 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
     இந்நிலையில், 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 411 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக இலங்கை அறிவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய பிசிசிஐ அணியில் தொடக்க வீரர் தன்மய் அகர்வால் 16, உடன் வந்த ஜீவன்ஜோத் சிங் 35 ரன்களில் வீழ்ந்தனர். இருவருமே தலா 3 பவுண்டரிகள் அடித்தனர். அடுத்து வந்த பந்தாரி 3 ரன்களில் நடையைக் கட்டினார்.
     தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதம் கடந்து 128 ரன்கள் விளாசினார். எனினும், சமர விக்ரமா பந்தில் டிக்வெல்லாவிடம் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவ்வாறாக 75 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு பிசிசிஐ தலைவர் லெவன் அணி 287 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டநேரம் முடிவுக்கு வர, போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
     பிசிசிஐ அணி தரப்பில் சந்தீப் 33, சக்úஸனா 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் திரிமானி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai