Enable Javscript for better performance
மரபணு ரீதியிலான பரிசோதனையில் இந்திய கிரிக்கெட் அணியினர்- Dinamani

சுடச்சுட

    

    மரபணு ரீதியிலான பரிசோதனையில் இந்திய கிரிக்கெட் அணியினர்

    By  புது தில்லி  |   Published on : 13th November 2017 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கிரிக்கெட் அணியினரின் உடற்தகுதியை ஆழ்ந்து அறிந்து மேம்படுத்தும் வகையில், அவர்களிடம் மரபணு ரீதியிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒரு வீரரின் வேகம், கொழுப்புச் சத்தை குறைக்கும் திறன், தாக்குப்பிடிக்கும் திறன், மீள்ச்சி நேரம், உடற்கட்டு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றத்தை கொண்டு வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுதொடர்பாக தகவலறிந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
     அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசுவின் பரிந்துரையின் அடிப்படையில் அணி வீரர்களிடம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும் முறையை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. இதனடிப்படையில் வீரர்களுக்கான விரிவான உடற்தகுதி திட்டத்தை வரைவு செய்ய இயலும்.
     இந்த பரிசோதனையின் மூலம் மரபணுவானது, ஒரு நபரின் உடற்தகுதி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துடன் எந்த வகையில் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் கண்டறிய இயலும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தப் பரிசோதனையை ஒரு வீரரிடம் மேற்கொள்ள ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை செலவிடப்படுகிறது.
     முதலில் "ஸ்கின்ஃபோல்ட் டெஸ்ட்' எனப்படும் தோல் தடிமன் சோதனை முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன் முடிவுகள் துல்லியமாக இல்லாததை அடுத்து, உடலில் கொழுப்பின் அளவை கணக்கிடும் வகையில் "டெக்ஸா' முறையிலான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
     ற்போது இந்த மரபணு பரிசோதனையின் மூலம் உடலில் குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்தை பராமரிப்பதற்கு உடலின் தேவைகள் என்ன என்பதை கண்டறிய முடியும். சர்வதேச அணிகளுக்கான தர அளவின் படி, ஒரு தேசிய அணி வீரரின் உடலில் இருக்க வேண்டிய கொழுப்புச் சத்தின் அளவு 23 சதவீதம் ஆகும்.
     இந்தப் பரிசோதனை தற்போது இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையின் அடிப்படையில் உடற்தகுதி மற்றும் ஆற்றலை மேம்படுத்திய வீரர்களில் புவனேஸ்வர் குமாரும் ஒருவர். இந்த பரிசோதனை மூலம் வீரர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி தேவைகளை வரையைறை செய்ய இயலும் என்று அந்த அதிகாரி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai