Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-ஒடிஸா ஆட்டம் டிரா- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம்-ஒடிஸா அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
     முதலில் தமிழகம் 165 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 530 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடுத்து ஆடிய ஒடிஸா கடைசி நாளின் முடிவில் 187.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 533 ரன்கள் எடுத்தது.
     வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் முதலில் பேட் செய்தது. அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 140, விஜய் சங்கர் 100, அபராஜித் 109 ரன்கள் எடுத்தனர். அபினவ் 12, ஜெகதீசன் 88, இந்திரஜித் 46, வாஷிங்டன் சுந்தர் 14, விக்னேஷ் 10 ரன்கள் எடுக்க, மகேஷ் டக் அவுட் ஆனார்.
     தமிழகம் டிக்ளேர் செய்தபோது அபராஜித் 109, ரஹீல் ஷா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஒடிஸா தரப்பில் சூர்யகாந்த் பிரதான் 3, சமந்த்ரே, கோவிந்த் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
     அடுத்து ஆடிய ஒடிஸா அணியில் நட்ராஜ் பெஹரா 91, ராஜேஷ் துபர் 97 ரன்கள் எடுத்தனர். பட்நாயக் 66, கோவிந்த் 29, சேனாபதி 4, சாந்தனு மிஸ்ரா 71, சமந்த்ரே 50, சாஹு 36, பிரதான் 43 ரன்கள் எடுத்தனர். ஆட்டநேர முடிவில் மோஹந்தி 18, திரஜ் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, மகேஷ் 3, சங்கர், ரஹீல் ஷா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஒடிஸாவின் ராஜேஷ் துபர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai