Enable Javscript for better performance
ராம்குமார் தரவரிசையில் முன்னேறும் தருணமிது- Dinamani

சுடச்சுட

    
    ramkumar

    தமிழகத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ராம்குமார் ராமநாதன் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள்ளாக வரும் நேரமிது என்று இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி கூறினார்.
     இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
     ராம்குமார் இந்த சீசன் முழுவதுமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்த இரு ஆண்டுகள் அவருக்கு முக்கியமானவையாக இருக்கும். இளம் வீரரான அவரது முன்னேற்றத்துக்கு சிறிது காலம் தேவைப்படும்.
     தனக்குத் தகுந்த பயிற்சியாளரை தற்போது தேர்வு செய்துள்ள அவர், சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். எனவே, தரவரிசையின் முதல் 100 இடங்களுக்குள்ளாக அவர் முன்னேற இது சரியான தருணமாகும் என்று மகேஷ் பூபதி கூறினார்.
     சென்னையைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 148-ஆவது இடத்தில் உள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai