Enable Javscript for better performance
ஓய்வு கோரினேன்- Dinamani

சுடச்சுட

    
    pandiya

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வளிக்குமாறு தானே கேட்டிருந்ததாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கூறினார்.
     முன்னதாக, தொடருக்கான அணியில் பாண்டியாவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தேர்வுக் குழுவுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. எனினும், எதன் காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது என தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
     இந்நிலையில், இதுதொடர்பாக பாண்டியா திங்கள்கிழமை கூறியதாவது:
     இலங்கை தொடரில் இருந்து ஓய்வளிக்குமாறு உண்மையில் நானே கோரியிருந்தேன். ஏனெனில் எனது உடல்நிலை அதற்குத் தயாராக இல்லை. தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடி வந்ததால், சற்று தளர்வடையத் தொடங்கினேன். முழு உடற்தகுதி அடைந்த பிறகே கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்.
     இந்த ஓய்வு எனக்கு நன்மையாக அமைந்துள்ளது. இதன்மூலம் எனது உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறேன். அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அதற்காக என்னை தயார்படுத்தும் வகையில் இந்த ஓய்வை பயன்படுத்துவேன் என்று பாண்டியா கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai