Enable Javscript for better performance
ரவி சாஸ்திரியின் ஆலோசனைகள் உதவியது- Dinamani

சுடச்சுட

    
    dk

    இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சரியான நேரத்தில் வழங்கிய ஆலோசனைகள், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முன்னேற்றத்துக்கு உதவியது என்று பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
     நீண்ட நாள்களுக்குப் பிறகு நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் களம் கண்ட தினேஷ் கார்த்திக், முதல் ஆட்டத்தில் 5-ஆவது வீரராக ஆடி 37 ரன்கள் எடுத்தார். 2-ஆவது ஆட்டத்தில் 4-ஆவது வீரராக, ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசினார். இந்நிலையில், தனது இந்த முன்னேற்றம் குறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
     நியூஸிலாந்துக்கு எதிரான அந்தத் தொடரில் விளையாடியதே எனது சிறப்பான ஆட்டமா எனத் தெரியாது. ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் அது முக்கியமான ஒன்றாக இருந்தது. எனது பேட்டிங் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கலந்தாலோசித்தேன்.
     நியூஸிலாந்துக்கு எதிரான எனது ஆட்டம் அவருக்கு திருப்தி அளித்திருந்தது. இருப்பினும், பேட்டிங்கில் நான் கவனம் செலுத்த வேண்டிய சில இடங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். அவற்றில் கவனம் செலுத்தி ஆடி வருகிறேன்.
     அதேபோல், எனது முன்னேற்றத்தில் அபிஷேக் நாயரும் குறிப்பிடத்தக்க ஒரு நபர். அவருடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன். நியூஸிலாந்துக்கு எதிரான தொடரின்போது கூட அவர் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.
     கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் களம் கண்ட தினேஷ், அணியில் தனக்கென நிலையான இடம் இன்றி போராடி வருகிறார். அதுகுறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:
     இதுவரை பல வாய்ப்புகளில் அணிக்கு மீண்டு வந்துள்ளேன். ஒருவேளை, இப்போதைய இந்த வாய்ப்பே எனக்கான கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம். ஆனால், அதை நான் அப்படி பார்க்க விரும்பவில்லை. அணியில் நமது எதிர்காலம் குறித்து சிந்திக்கும் பட்சத்தில், நமக்குள் கூடுதல் நெருக்கடி ஏற்படும். தற்போதைய எனது ஆட்டம் எனக்கு திருப்தி அளிக்கிறது. எதிர்வரும் வாய்ப்புகளிலும் அப்படியே தொடருவேன். எதிர்காலத்தில் அணியில் எனக்கான இடம் குறித்து இதுவரை ஏதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றார் தினேஷ் கார்த்திக்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai