Enable Javscript for better performance
சீன ஓபன் பாட்மிண்டன்: 2-ஆவது சுற்றில் சாய்னா- Dinamani

சுடச்சுட

    
    saina

    சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் புதன்கிழமை 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை எதிர்கொண்ட சாய்னா, அதில் 21-12, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவர் தனது அடுத்த சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்க உள்ளார். இதற்கு முன்னதாக யமாகுசியை 3 முறை சந்தித்துள்ள சாய்னா அதில் ஒரு வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளார்.
    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் செளரவ் வர்மா தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டஸிடம் 14-21, 15-21, 11-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
    மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 14-21, 15-21 என்ற செட் கணக்கில் தனது 3-ஆவது சுற்றில் தென் கொரியாவின் ஹா நா பேக்-சே யூ ஜங் ஜோடியிடம் தோல்வி கண்டது. அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்-சிரக் ஷெட்டி ஜோடி 13-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் செங் லியு-நான் ஸாங் ஜோடியிடம் முதல் சுற்றில் தோல்வி கண்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai