Enable Javscript for better performance
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சுஷில் குமார், சாக்ஷி மாலிக் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்: சுஷில் குமார், சாக்ஷி மாலிக் பங்கேற்பு

    By DIN  |   Published on : 16th November 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    susil_kumar

    தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    இந்தப் போட்டியில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற சுஷில் குமார், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியான் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற கீதா போகத் உள்ளிட்ட பிரபல வீரர், வீராங்கனைகள் முறையே தங்களது எடைப் பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.
    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு, முதல் முறையாக களம் காணும் சுஷில் 'ஃப்ரீ ஸ்டைல்' 74 கிலோ எடைப் பிரிவில், இந்திய ரயில்வே சார்பில் போட்டியிடுகிறார்.
    ஜார்ஜியாவில் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுஷில் குமார், நான்கு நாள்கள் நடைபெறவுள்ள தேசிய மல்யுத்த சாம்பியின்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அண்மையில் நாடு திரும்பினார். இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றில், தினேஷை எதிர்கொண்டு மிக எளிதாக அவரை வீழ்த்தி போட்டிக்கு சுஷில் தேர்வானார்.
    முன்னதாக, ரியோ டீ ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சுஷில் குமாருக்கு பதிலாக நர்சிங் யாதவை இந்திய மல்யுத்த சம்மேளனம் (டபிள்யூஎஃப்ஐ) தேர்வு செய்தது. இந்த முடிவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் சுஷில் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த சம்பவம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. எனினும், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதன்பிறகு, அவர் பங்கேற்கவுள்ள முதல் போட்டி இதுவாகும்.
    ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் நர்சிங் தோல்வி அடைந்ததால் அவராலும் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai