Enable Javscript for better performance
தேசிய ஷாட்கன் போட்டி: மானவ்ஜித், ஷ்ரேயாஸி முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஷாட்கன் போட்டி: மானவ்ஜித், ஷ்ரேயாஸி முன்னேற்றம்

    By DIN  |   Published on : 16th November 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நடைபெறும் 61-ஆவது தேசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் மானவ்ஜித் சிங், ஷ்ரேயாஸி சிங் ஆகியோர் தங்களது பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
    இதில் ஆடவருக்கான டிராப் பிரிவில் மானவ்ஜித் 49 புள்ளிகளுடன் முதலிடமும், அமன் அலி எலாஹி அதே புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், கினான் செனாய் 48 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர். இதில் மானவ்ஜித் சிங் ஓராண்டுக்குப் பிறகு போட்டியில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மொத்தம் 207 பேர் பங்கேற்றனர்.
    மகளிர் டிராப் பிரிவில் ஷ்ரேயாஸி சிங் 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சிக்கா பதாவ்ரியா 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், பஞ்சாபின் ராஜேஸ்வரி குமாரி 21 புள்ளிகளுடன் 3-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் மொத்தம் 43 பேர் போட்டியிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai