Enable Javscript for better performance
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே இலக்கு- Dinamani

சுடச்சுட

    
    steve-gobal

    ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறுவதே தங்களது இலக்கு என போட்டியில் புதிதாக இணைந்துள்ள ஜாம்ஷெத்பூர் அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பல் கூறியுள்ளார்.
    ஐஎஸ்எல் போட்டியின் 4-ஆவது சீசன் வரும் 17-ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. இந்த சீசனில் ஜாம்ஷெத்பூர் எஃப்சி அணி புதிதாக இணைந்துள்ளது. 
    இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் கோப்பல் கூறியதாவது:
    எங்களது அணி புதிய அணியாகும். எனவே பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனினும், பிளே-ஆஃப் சுற்று வரை முன்னேறுவதை எங்களது இலக்ககாக கொண்டுள்ளோம். அதற்காக எந்த அளவு சிறப்பாக விளையாட இயலுமோ, அந்த அளவு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
    எங்களது அணியில் கோல்கீப்பர் சுப்ரதா பால் மற்றும் எஸ்பினோஸா அர்ரோயா, டிரி, ஆன்ட்ரி பெக்கி, அனஸ் எடதொடிகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அதில் 3-4 பேரையே களமிறக்க உள்ளோம். முதல் ஆட்டத்தை மிகக் கவனமாக எதிர்கொள்ள இருக்கிறோம் என்று ஸ்டீவ் கோப்பல் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai