Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ்: ஜோஷ்னா முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    joshna

    ஹாங்காங் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். எனினும், தீபிகா பலிக்கல், செளரவ் கோஷல் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினர்.
    இதில், போட்டியின் தொடக்க நாளான புதன்கிழமை முதல் இந்தியராக ஜோஷ்னா சின்னப்பா களம் கண்டார். தனது முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீராங்கனையான கனடாவின் ஹோலி நாட்டனை எதிர்கொண்ட ஜோஷ்னா, 11-5, 8-11, 11-5, 8-11, 11-6 என்ற செட் கணக்கில் 51 நிமிடத்தில் வெற்றி பெற்றார்.
    போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா சின்னப்பா, தனது அடுத்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் எகிப்தின் நெளரான் கோஹரை எதிர்கொள்கிறார்.
    இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செளரவ் கோஷல், 9-11, 6-11, 9-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் டெக்லானிடம் தோல்வி கண்டார். அதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் 4-11,4-11,8-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கும் எகிப்தின் நூர் எல் தாயெப்பிடம் தோல்வி கண்டார்.
    மற்றொரு ஆட்டத்தில் இந்தியரான ஹரீந்தர் பால் சாந்துவை, 9-11, 11-3, 11-5, 11-1 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் பால் கோல் வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai