Enable Javscript for better performance
பயிற்சிக்கு அமெரிக்கா செல்லும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பயிற்சிக்கு அமெரிக்கா செல்லும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

    By DIN  |   Published on : 17th November 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சிக்காக அடுத்த மாதம் 7-ஆம் தேதி அமெரிக்கா செல்கின்றனர்.
    முன்னதாக, பயிற்சிக்காக ஐரோப்பிய நாடுகளுக்கும், கியூபாவுக்கும் சென்ற இந்திய வீரர்கள், அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும்.
    இந்த ஆண்டு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற கௌரவ் பிதூரி (56 கிலோ எடைப் பிரிவு), ஆசியான் குத்துச்சண்டை போட்டியில் 3 முறை பதக்கம் வென்ற சிவ தாபா (60 கிலோ), காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மனோஜ் குமார் (69 கிலோ), அமித் பங்கல் (49 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), கவீந்தர் பிஷ்த் (52 கிலோ) உள்ளிட்ட வீரர்கள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கான பயிற்சியாளர் சான்டியாகோ நிவா கூறியதாவது:
    மத்திய அரசின் 'பதக்க வாய்ப்புள்ள வீரர்கள்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 குத்துச்சண்டை வீரர்களில் 7 பேர், பயிற்சிக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். தேசிய பயிற்சி மையத்தில் தற்போது 60 குத்துச்சண்டை வீரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 40-ஆகக் குறைக்கப்படும்.குறைந்த எடைப் பிரிவில் நமது வீரர்கள் நல்ல திறனுடன் உள்ளனர். அதிக எடைப் பிரிவில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றார் சான்டியாகோ நிவா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai