ஆஷஸ்: ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

7 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்... 
ஆஷஸ்: ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

7 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். நெவில், மேத்யூ வேட் ஆகிய இருவரையும் தாண்டி பெய்ன் அணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேத்யூ ரென்ஷா, க்ளென் மேக்ஸ்வெல், ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். டேவிட் வார்னரும் பான்கிராஃப்டும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளார்கள். 

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது. 

ஆஷஸ் தொடருக்கான அஸ்திரேலிய அணி:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேம்ரூன் பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜாக்ஸன் பேர்ட், சாட் சேயர்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com