ஆஸ்திரேலிய ஆஷஸ் அணி குழப்பமாகக் காட்சியளிக்கிறது: ஷேன் வார்னே சாடல்!

தன்னுடைய மாநில அணியில் விக்கெட் கீப்பராக விளையாடாத ஒருவரை ஆஷஸ் அணிக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்துள்ளதை ஷேன் வார்னே விமரிசனம் செய்துள்ளார்...
ஆஸ்திரேலிய ஆஷஸ் அணி குழப்பமாகக் காட்சியளிக்கிறது: ஷேன் வார்னே சாடல்!

தன்னுடைய மாநில அணியில் விக்கெட் கீப்பராக விளையாடாத ஒருவரை ஆஷஸ் அணிக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்துள்ளதை ஷேன் வார்னே விமரிசனம் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். நெவில், மேத்யூ வேட் ஆகிய இருவரையும் தாண்டி பெய்ன் அணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேத்யூ ரென்ஷா, க்ளென் மேக்ஸ்வெல், ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணித் தேர்வு குறித்து முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியதாவது:

தற்போதைக்கு இங்கிலாந்து அணி மிக நல்ல நிலையில் உள்ளது. அவர்கள் தங்கள் பணியே செவ்வனே செய்துவருகிறார்கள். ஆனால் ஆஸ்திரேலிய அணி குழப்பமாகக் காட்சியளிக்கிறது. தன்னுடைய மாநில அணியில் விக்கெட் கீப்பராக விளையாடாத ஒருவரை ஆஷஸ் அணிக்கான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்துள்ளார்கள். முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவை விடவும் இங்கிலாந்து அணி சாதகமான சூழலுடன் செல்கிறது என்று ஆஸ்திரேலிய அணித் தேர்வை விமரிசனம் செய்துள்ளார்.

ஆனால், முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், அணித் தேர்வைப் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது: பெய்னின் தேர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தற்போதைக்கு நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களைத் தேர்வு செய்துள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி குழப்பமாகக் காட்சியளிப்பதுபோல எனக்குத் தெரியவில்லை. மிகவும் துணிச்சலுடன் சில தேர்வுகள் உள்ளன. கடினமான முடிவுகளையும் எடுத்துள்ளார்கள். இங்கிலாந்தைத் தோற்கடிக்க இந்த அணி சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் என ஆஷஸ் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணித் தேர்வைப் பாராட்டியுள்ளார்.

ஆஷஸ் தொடருக்கான அஸ்திரேலிய அணி:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேம்ரூன் பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜாக்ஸன் பேர்ட், சாட் சேயர்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com