Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
    ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான இந்த அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக கேமரூன் பேன்கிராஃப்ட், விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
    இதில் கேமரூனுக்கு இது முதல் டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து கேமரூன் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    அதேபோல், டிம் பெய்ன் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார். முன்னதாக அவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் அணியில் இடம்பிடித்திருந்தார். மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள ஷான் மார்ஷ், பேட்டிங்கில் 6-ஆவது வீரராக களம் காண இருக்கிறார்.
    வேகப்பந்து வீச்சில், மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் உள்ளிட்டோருடன் சாத் சேயர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தகுந்த ஃபார்மில் இல்லாததன் காரணமாக மட் ரென்ஷா மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
    அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பேன்கிராஃப்ட், ஜேக்சன் பேர்டு, பட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேஸில்வூட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாத் சேயர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai