Enable Javscript for better performance
இந்திய மகளிர் லீக் கால்பந்து: தமிழகம் சார்பில் 'சேது எஃப்சி'- Dinamani

சுடச்சுட

    

    இந்திய மகளிர் லீக் கால்பந்து: தமிழகம் சார்பில் 'சேது எஃப்சி'

    By DIN  |   Published on : 18th November 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய மகளிர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் (ஐடபிள்யூஎல்) நடப்பு சீசனில் மதுரையைச் சேர்ந்த 'சேது எஃப்சி' அணி தமிழகத்தின் சார்பில் பங்கேற்கிறது.
    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்போட்டியில் சேது அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இப்பிரிவில் ஒடிஸா, குஜராத், அருணாசல பிரதேசம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இடம்பெற்றுள்ளன.
    இப்போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் வரும் 25-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் தொடங்குகிறது. இதில் சேது அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத்தின் பரோடா கால்பந்து அகாதெமி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் 'ஏ', 'பி' ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதிபெறும்.
    சேது அணியில் தமிழக வீராங்கனைகளுடன் இதர மாநிலங்களைச் சேர்ந்த தொழில்முறை வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai