துளிகள்...
By DIN | Published on : 18th November 2017 12:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் துல்சி யாதவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் ஏற்பாட்டின் பேரில், இளம் துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காற்று மாசு காரணமாக தில்லி அரை மாரத்தான் போட்டி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் கூடுதலான நபர்கள் அதில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
உலக பாட்மிண்டன் சம்மேளனத்தின் சார்பிலான உலக சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் போலந்தில் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.