Enable Javscript for better performance
ரஞ்சி கோப்பை: முதல் நாளில் ம.பி. 224/7- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாளில் மத்தியப் பிரதேசம் 80 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்துள்ளது.
    மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மத்தியப் பிரதேச அணியில் தொடக்க வீரர் ஸ்ரீவஸ்தவா 13, உடன் வந்த ரஜத் படிதார் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் கண்ட சுபம் சர்மா 8 ரன்களிலும், கேப்டன் தேவந்திர பண்டெலா 20 ரன்களிலும் பெவிலின் திரும்பினர். ஹர்ப்ரீத் சிங் 4 ரன்களில் நடையைக் கட்டினார்.
    அடுத்துவந்த அணியின் விக்கெட் கீப்பர் அங்கித் தாணே 125 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அவர், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த புனீத் தாதே டக் அவுட் ஆனார்.
    முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அங்கித் சர்மா 75, மிஹிர் ஹிர்வானி 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
    தமிழகம் சார்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3, முகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai