சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்
By ஸ்டாக்ஹோம், | Published on : 19th November 2017 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்வீடன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-சத்தியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இந்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இங்கிலாந்தின் பால் டிரிங்க்ஹால்-லியாம் பிட்ச்ஃபோர்டு ஜோடியை எதிர்கொண்ட சரத்-சத்தியன் இணை, அதில் 3-2 (4-11, 10-12, 12-10, 11-8, 11-8)என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
காலிறுதியில் அந்த ஜோடி, போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நைஜீரியாவின் கத்ரி அருனா-போர்ச்சுகலின் டியோகோ கார்வால்ஹோ இணையை 3-1 (11-7, 13-11,11-8, 11-4 ) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. எனினும் அந்த சுற்றில் ஹாங்காங்கின் கவான் கிட் ஹோ-சன் டிங் வோங் ஜோடியிடம் 1-3 (10-12, 3-11, 11-7, 4-11) என்ற கணக்கில் வீழ்ந்தது சரத்-சத்தியன் ஜோடி.