Enable Javscript for better performance
Stokes breaks Twitter silence to increase buzz around recall- Dinamani

சுடச்சுட

    

    பாதி அணியைத் தெரியாதவர் கிரிக்கெட் நிபுணரா?: மேத்யூ ஹேடன் மீது பென் ஸ்டோக்ஸ் சாடல்!

    By எழில்  |   Published on : 21st November 2017 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stokes1

     

    ஆஷஸ் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியை விமரிசனம் செய்த முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனுக்கு இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் .

    கடந்த செப்டம்பர் மாதம், இரவு நேர கேளிக்கை விடுதியில் இளைஞருடன் ஏற்பட்ட தகராறில் ஸ்டோக்ஸைக் காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவர் விடுதலை ஆனார். இதையடுத்து சமீபகாலமாகச் சமூகவலைத்தளங்களில் ஒன்றிரண்டு பதிவுகள் மட்டும் வெளியிட்டு அமைதியாக இருக்கும் ஸ்டோக்ஸ், தற்போது முன்னாள் ஆஸி. வீரர் மேத்யூ ஹேடனை விமரிசனம் செய்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

    இதுகுறித்து ஸ்டோக்ஸ் ட்வீட் செய்ததாவது: இங்கிலாந்து அணியில் உள்ள பாதி வீரர்களைத் தெரியாது என்கிறார் மேத்யூ ஹேடன். அவர்களில் இரண்டு பேர் மட்டுமே சர்வதேச அளவில் விளையாடியதில்லை. அவர் (ஹேடன்) ஒரு கிரிக்கெட் நிபுணர்தானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டோலில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸை கைது செய்தனர். இதையடுத்து இங்கிலாந்தின் ஆஷஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டார். துணை கேப்டன் பதவி ஆண்டர்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 23-ம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai