Enable Javscript for better performance
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 4-ஆவது இடத்துக்கு புஜாரா முன்னேற்றம்

    By DIN  |   Published on : 22nd November 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pujara

    ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 5-ஆவது இடத்திலும், புஜாரா 4-ஆவது இடத்துக்கும் முன்னேறினர். 
    மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அண்மையில் நடந்துமுடிந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    இது, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 50-ஆவது சதமாகும். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 நாள்களும் பேட் செய்து புஜாரா சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 28-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
    பந்து வீச்சில் ஜடேஜா 3-ஆவது இடம்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய அணியின் பந்துவீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ரவீந்தர் ஜடேஜா 3-ஆவது இடத்துக்கு சரிந்தார். அதேநேரம், ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இவர், 2-ஆவது இடம் வகிக்கிறார்.
    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி 29-ஆவது இடத்துக்கும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 18-ஆவது இடத்துக்கும் முன்னேறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai