Enable Javscript for better performance
பெங்களூரு ஓபன்: 4-ஆவது சுற்றில் யூகி பாம்ப்ரி- Dinamani

சுடச்சுட

    
    yuki

    பெங்களூரு ஓபன் 3-ஆவது சுற்று ஆட்டத்தில் பந்தை திருப்பும் இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி.

    பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய வீரர் சாய்ராம் பாலாஜியை வீழ்த்தி 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக, வைல்கார்டு பிரிவில் நேரடியாக தகுதிபெற்ற இந்திய வீரர்கள் விஷ்ணு வர்தன், சுராஜ் பிரபோத் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தோல்வி அடைந்தனர்.
    விஷ்ணு 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் மரியோ விலெல்லா மார்டினஸிடம் வீழ்ந்தார்.
    மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ஸ்வீடனின் எலியஸ் யமெர் 6-4, 6-7 என்ற செட் கணக்கில் சுராஜை வீழ்த்தினார்.
    இதனிடையே, போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஸ்லோவெனியாவின் பிலாஸ் கவ்கிக், 6-2, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஹர்செகோவினாவின் டோமிஸ்லாவ் பிகிக்கை வீழ்த்தினார்.
    தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சாகேத் மைனேனி போட்டியிலிருந்து விலகினார்.
    முன்னதாக, அவர் இந்திய வீரர் டி.சிங்கை செவ்வாய்க்கிழமை எதிர்கொள்ள இருந்தார்.
    இரட்டையர் பிரிவு 2-ஆவது சுற்று ஆட்டத்தில், ஸ்வீடனின் எலியாஸ் யமெர்-இந்தியாவின் சுமித் நாகல் ஜோடியிடம் 6-4, 1-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-என் விஜய் சுந்தர் பிரசாந்த் வீழ்ந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai