Enable Javscript for better performance
விளையாட முடியவில்லை எனில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்- Dinamani

சுடச்சுட

    

    விளையாட முடியவில்லை எனில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்: கபில் தேவ் அறிவுரை!

    By DIN  |   Published on : 22nd November 2017 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kabildev

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து போட்டியிடும் சூழல் நேரிடும்போது, விளையாட முடியாது என கருதும் வீரர்கள், ஓய்வில் செல்லலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
    அதிக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய சூழல் வரும்போது, வீரர்களால் தொடர்ந்து விளையாட முடியாத பட்சத்தில் ஓய்வில் செல்லலாம். அவர்கள் அனைவரும் தொழில்முறை வீரர்கள். ஒரு தொழில்முறை வீரர், 'என்னால் விளையாட முடியும்; என்னால் விளையாட முடியாது' என்று சொல்லலாம்.
    அதிக கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொல்லும் வீரர்கள் பக்கம் நான் இருக்க மாட்டேன். அவர்கள் சார்பாக என்னால் எந்த விளக்கமும் அளிக்க முடியாது.
    இந்திய கிரிக்கெட் அணி கடந்த 15 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது என்றார் கபில் தேவ்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai