Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    
    smith

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தது.
    ஆஸ்திரேலியா, வேகப்பந்துவீச்சுக்கு மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், பட் கம்மின்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் இவர்கள் மூவரும் ஒருசேர களம் காண்பது இது முதல் முறையாகும். பிரிஸ்பேனின் கப்பா மைதானம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான ஒன்று. கடந்த 1988 முதல் இங்கு நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா இழந்ததில்லை. இந்த மைதானத்தில் இங்கிலாந்து கடந்த 31 ஆண்டுகளில் ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
    ஆஸ்திரேலியாவின் அணியின் பேட்டிங்கை பொருத்த வரையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர். இதில் பயிற்சியின்போது காயம் கண்டுள்ள வார்னர், முதல்நாள் போட்டிக்கு முன்பாக மீண்டுவருவதாக தெரிவித்துள்ளார். அணியில் புதிதாக கேமரூன் பான்கிராஃப்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், கோப்பையை தக்கவைக்க தீவிர முனைப்புடன் களம் காண்கிறது. புதிதான பேட்டிங் லைனுடன் அந்த அணி களம் காண உள்ளது. சச்சரவு ஒன்றின் காரணாக விசாரணையில் இருக்கும் பென் ஸ்டோக்ஸ், அணியில் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங்கிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பேட்டிங்கில் ஜோ ரூட், அலாஸ்டர் குக் ஆகியோர் கலக்க, பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் பலம் காட்ட உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai