Enable Javscript for better performance
ஒலிம்பிக் போட்டியாக உருவெடுக்க கிரிக்கெட் பரவலாக வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    ஒலிம்பிக் போட்டியாக உருவெடுக்க கிரிக்கெட் பரவலாக வேண்டும்

    By DIN  |   Published on : 23rd November 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sewah

    ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வேண்டுமெனில், அது பரவலாக அதிக நாடுகளில் விளையாடப்பட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்ட் மோர்டிஸ் ஐஸ் கிரிக்கெட் விளையாட்டினை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சேவாக்குடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ள இந்த ஐஸ் கிரிக்கெட்டில், முன்னாள் வீரர்கள் சேவாக், மஹிலா ஜெயவர்தனே, ஷோயிப் அக்தர், டேனியல் வெட்டோரி, முகமது கைஃப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது குறித்த கேள்விக்கு சேவாக் பதிலளித்ததாவது:
    ஒரு விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றால், அந்த விளையாட்டு அதிக நாடுகளில் விளையாடப் பட வேண்டும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டையும் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க, அது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்பட வேண்டும் என்று சேவாக் கூறினார்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) 105 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளபோதிலும், 12 நாடுகள் மட்டுமே முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளன. கிரிக்கெட் விளையாட்டை 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை ஐசிசி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த 1990-ஆம் ஆண்டில் மட்டும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai