Enable Javscript for better performance
மும்பை ஓபன்: 4-ஆவது சுற்றில் அங்கிதா- Dinamani

சுடச்சுட

    

    மும்பை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் உலகின் 293-ஆம் நிலை வீராங்கனையான அங்கிதா, உலகின் 233-ஆம் நிலை வீராங்கனையான ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் அங்கிதா 7-6(2), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    அந்தச் சுற்றில் அவர், உலக தரவரிசையில் 244-ஆவது இடத்தில் இருக்கும் தாய்லாந்தின் பியாங்டன் லிபீச்சை எதிர்கொள்கிறார். முன்னதாக பியாங்டன் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் லிùஸட் காப்ரெராவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
    சர்வதேச ஒற்றையர் தரவரிசையில், இந்திய மகளிர் வரிசையில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருக்கும் ராய்னா மட்டுமே, மும்பை ஓபனில் தேசத்தின் ஒரே நம்பிக்கையாவார். முன்னதாக, இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு வாய்ப்பு பெற்றிருந்த கர்மான் கௌர் தன்டி, ஜீல் தேசாய், ருதுஜா போஸ்லே ஆகிய 3 இந்திய வீராங்கனைகளும் 3-ஆவது சுற்றில் தோல்வியைச் சந்தித்து போட்டியிலிருந்து வெளியேறியது நினைவுகூரத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai