Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன்: சாய்னா, சிந்து முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    sindu

    ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா தனது முதல் சுற்றில், உலகின் 44-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் மெட்டே பெளல்சென்னை 21-19, 23-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 46 நிமிடங்கள் நீடித்தது.
    சாய்னா தனது 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுஃபெய்யை சந்திக்க உள்ளார்.
    இதனிடையே, போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, தனது முதல் சுற்றில் 21-18, 21-10 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லியூங் யுட் யீயை வென்றார். சிந்து 2-ஆவது சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரி அல்லது ரஷியாவின் ஈவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவை எதிர்கொள்ள இருக்கிறார்.
    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஹு யுன்னை வென்றார். உலகின் 10-ஆம் நிலை வீரரான பிரணாய் அடுத்த சுற்றில் ஜப்பானின் கஸுமாசா சகாயுடன் மோதுகிறார்.
    எனினும், மற்றொரு இந்திய வீரரான காஷ்யப் முதல் சுற்றில் 21-15, 9-21, 20-22 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் லீ டாங் கியூனிடம் வீழ்ந்தார். அதேபோல், செளரவ் வர்மா 15-21, 8-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவிடம் தோல்வி கண்டார்.
    மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 11-21, 21-19, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுவாங் டாங்பிங்-லி வென்மெயிடம் தோல்வி கண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai