Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன் காலிறுதியில் சிந்து: வெளியேறினார் சாய்னா- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஓபன் காலிறுதியில் சிந்து: வெளியேறினார் சாய்னா

    By DIN  |   Published on : 24th November 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sindu

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார். எனினும், மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
    இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சிந்து 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
    அயா ஒஹோரிக்கு எதிராக சிந்து பதிவு செய்யும் 3-ஆவது வெற்றி இதுவாகும். சிந்து தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொள்ள இருக்கிறார்.
    இதனிடையே, உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், தனது 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் யுஃபெயிடம் 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இவர்கள் இருவரும் மோதிக் கொள்வது இது முதல் முறையாகும்.
    இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 10-ஆம் நிலை வீரரும் இந்தியருமான ஹெச்.எஸ்.பிரணாய் தனது 2-ஆவது சுற்றில் ஜப்பானின் கஸுமாஸா ஸகாயிடம் 21-11, 10-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். பிரணாய்க்கு எதிராக கஸுமாஸா வெற்றி பெறுவது இது 3-ஆவது முறையாகும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai