குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: உலக சாதனையை நெருங்கும் அஸ்வின்!

இன்று 4 விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் இதுவரை 296 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்...
குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: உலக சாதனையை நெருங்கும் அஸ்வின்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இன்று அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து அவர் விரைவில் உலக சாதனை படைக்கவுள்ளார். 

45 டெஸ்ட் போட்டிகளில் 250 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து (அடுத்த இடத்தில் டென்னிஸ் லில்லீ, 48 டெஸ்டுகள்) உலக சாதனை புரிந்த 31 வயது அஸ்வின் தற்போது அதிகவேக 300 விக்கெட்டுகளுக்குக் குறி வைக்கிறார். 

அதிகவேக 300 டெஸ்ட் விக்கெட்டுகள்

டென்னிஸ் லில்லீ - 56 டெஸ்டுகள்
முரளிதரன் - 58 டெஸ்டுகள்
ஹேட்லி - 61 டெஸ்டுகள்

தற்போது தனது 54-வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறார் அஸ்வின். இன்றைய 4 விக்கெட்டுகளுடன் அஸ்வின் இதுவரை 296 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அடுத்த இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்துவிட்டால் 300 விக்கெட்டுகளை குறைந்த டெஸ்டுகளில் (54 டெஸ்டுகள்) எடுத்த வீரர் என்கிற உலக சாதனையைப் படைப்பார்.

ஒருவேளை இந்த டெஸ்டில் முடியாமல் போனாலும், அடுத்த டெஸ்டில் 300-வது விக்கெட்டை எடுத்தாலும் அவரால் இச்சாதனையை நிகழ்த்தமுடியும். இதனால் இந்திய ரசிகர்கள் அஸ்வினின் புதிய சாதனையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com