Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 302- Dinamani

சுடச்சுட

    
    england

    ஜேக் பால் அடித்த பந்தை பாய்ந்து கேட்ச் பிடிக்கும் டேவிட் வார்னர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து, முதல் நாள் முடிவில் 80.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 83 ரன்கள் அடித்திருந்தார். 2-ஆவது நாள் ஆட்டத்தை டேவிட் மலான் 28, மொயீன் அலி 13 ரன்களுடன் தொடங்கினர். அசத்தலாக ஆடிய டேவிட் மலான் அரைசதம் கடந்தார். 130 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்திருந்த அவர், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஷான் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.
    இதனிடையே, 38 ரன்கள் எடுத்திருந்த மொயீன் அலி, அடுத்த ஓவரிலேயே நாதன் லயன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோவ் 9, ஸ்டூவர்ட் பிராட் 20 ரன்களில் நடையைக் கட்ட, கடைசி விக்கெட்டாக ஜேக் பால் 14 ரன்களில் வீழ்ந்தார்.
    ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா 3, நாதன் லயன் 2, ஹேஸில்வுட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    ஆஸ்திரேலியா- 165/4: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 64, ஷான் மார்ஷ் 44 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
    இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட, ஆஸ்திரேலியா 137 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகள் உள்ளது. முன்னதாக, தொடக்க வீரர்களான பேன்கிராஃப்ட் 5, டேவிட் வார்னர் 26, உஸ்மான் கவாஜா 11, ஹேண்ட்ஸ்காம்ப் 14 ரன்களில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி, ஜேக் பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai