Enable Javscript for better performance
குத்துச் சண்டை: இறுதிச்சுற்றில் 3 இந்தியர்கள்- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜோதி குலியா, சசி சோப்ரா, அன்குஷிதா போரோ ஆகியோர் முறையே தங்களது எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
    முன்னதாக, 51 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜோதி குலியா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கஜகஸ்தானின் ஜன்சயா அப்திராய்மோவாவை வீழ்த்தினார்.
    இவர், ரஷியாவின் எடெனினா மோல்சனோவாவை இறுதிச்சுற்றில் எதிர்கொள்ள உள்ளார்.
    57 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் சசி சோப்ரா, மங்கோலியாவின் நமுன் மன்கோரை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அங்கு, வியத்நாமின் டோ ஹாங் நோக்கை அவர் 
    எதிர்கொள்கிறார்.
    இதேபோல், 64 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதியில் அஸ்ஸாமைச் சேர்ந்த அன்குஷிதா போரோ, தாய்லாந்தின் தன்ச்நோக் சக்ஸ்ரீயை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai