Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியர் சுமித் நாகல் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான யூகி பாம்ப்ரியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதில் அவர் பிரிட்டனின் ஜேய் கிளார்க்கை எதிர்கொள்கிறார்.
    2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளு தூக்குதல் பிரிவில் முதல் முறையாக, நியூஸிலாந்து சார்பில் லெளரெல் ஹப்பார்டு (39) என்ற திருநங்கை பங்கேற்கிறார். அவர் பெண்களுக்கான 90+ கிலோ பிரிவில் போட்டியிடுகிறார்.
    2018-ஆம் ஆண்டு சீசனில் பிரான்ஸின் எட்வர்டு ரோஜர் வாùஸலினுடன் இணை சேர்ந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.
    பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியின் 3-ஆவது சீசனின் ஆட்டங்கள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 2018 ஜனவரி 5 முதல் 9-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
    தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் (டிடிஎஸ்எல்) போட்டியின் லீக் ஆட்டத்தில் ரெஃபெக்ஸ் அவெஞ்ஜர்ஸ் 50-40 என்ற கணக்கில் பில்ராத் பிளாஸ்டர்ஸையும், ஹிந்துஸ்தான் கிங் பாங்ஸ் 50-40 என்ற கணக்கில் மொபி சார்ஜர்ஸையும், கிரீன் ராக்கர்ஸ் 50-40 என்ற கணக்கில் மாஹி வாரியர்ஸையும், ஜேப்பியார் ஸ்மாஷர்ஸ் 80-10 என்ற கணக்கில் பிளாக் தன்டர் அணியையும் வீழ்த்தின.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai