Enable Javscript for better performance
ஸ்கோர் '2': டக் அவுட் '9'- Dinamani

சுடச்சுட

    

    பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில், கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாகாலாந்து அணி வினோதமான முறையில் தோல்வியை சந்தித்துள்ளது.
    பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் இந்தப் போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் கேரளம்-நாகாலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த நாகாலாந்து 17 ஓவர்களில் 2 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க வீராங்கனை மேன்கா 18 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுக்க, உதிரிகள் மூலம் மேலும் ஒரு ரன் கிடைத்தது. அவர் தவிர அனைத்து வீராங்கனைகளும் டக் அவுட் ஆக, பிரியங்கா ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    பின்னர் 3 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட கேரள அணிக்கு முதல் பந்தை ஒய்டாக வீசினார் நாகாலாந்தின் தீபிகா கைன்துரா. 
    அடுத்த பந்தில், கேரளாவின் தொடக்க வீராங்கனை அன்சு ராஜு பவுண்டரி விளாசினார். இதனால் கேரளம் 0.1 ஓவர்களில் 5 ரன்களை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai