ஸ்மித்தின் மகத்தான சதம்: சாதனை விவரங்கள்!

கிரிக்கெட் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் ஸ்மித்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார்கள்...
ஸ்மித்தின் மகத்தான சதம்: சாதனை விவரங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. அணி கேப்டன் ஸ்மித், மிகவும் பொறுப்புடன் விளையாடி சதமெடுத்தார். 326 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்மித்தின் இந்தச் சதத்துக்குப் பெரிய பாராட்டுகள் கிடைத்துள்ளன. கிரிக்கெட் நிபுணர்கள், இந்நாள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் ஸ்மித்தைப் பாராட்டித்தள்ளியுள்ளார்கள்.

ஸ்மித் சதம்: சாதனை விவரங்கள்

* இது ஸ்டீவ் ஸ்மித்தின் 21வது டெஸ்ட் சதம். சொந்த மண்ணில் 11 சதங்களும் வெளிநாடுகளில் 10 சதங்களும் எடுத்துள்ளார். 21 சதங்களில் 19 சதங்கள் முதல் இன்னிங்ஸில் எடுத்தவை. 

* ஒரு கேப்டனாக 48 இன்னிங்ஸில் 13 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். கேப்டனாக நியமிக்கப்பட்ட டிசம்பர் 2014 முதல் வேறு எந்த கேப்டன்களையும் விடவும் அதிக டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார் ஸ்மித். இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி 11 சதங்கள் எடுத்துள்ளார். மற்ற கேப்டன்கள் யாரும் 5 சதங்களைத் தாண்டவில்லை.

* இந்தப் போட்டியில்தான் சதமெடுக்க ஸ்மித்துக்கு 261 பந்துகள் தேவையாக இருந்தன. இதற்கு முன்பு ராஞ்சியில் 227 பந்துகளில் சதமெடுத்தார் ஸ்மித்.

* இது, 1993-க்குப் பிறகு நிதானமாக எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரரின் ஆஷஸ் சதமாகும். 1993-ல் டேவிட் பூன் 284 பந்துகளில் சதமெடுத்தார்.  

* இந்தியாவுக்கு எதிராக 7 டெஸ்ட் சதங்களும் இங்கிலாந்துக்கு எதிராக 6 டெஸ்ட் சதங்களும் எடுத்துள்ளார். 

குறைந்த இன்னிங்ஸில் 21-வது சதமெடுத்த வீரர்கள்

பிராட்மேன் - 56 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர் - 98 இன்னிங்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் - 105 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 110 இன்னிங்ஸ்
முகமது யூசுப் - 120 இன்னிங்ஸ்

28 வயதுக்குள் அதிக டெஸ்ட் சதங்கள்

டெண்டுல்கர் - 29
குக் - 25
ஸ்மித் - 21

முதல் ஆஷஸ் போட்டியில் சதமெடுத்த கேப்டன்கள்

109 மெக்லரன், சிட்னி, 1897
133 நோபள், சிட்னி, 1903
114 காலின்ஸ், சிட்னி, 1924
105 ஸ்டீவ் வாக், எக்பஸ்டன், 2001
141 ஸ்மித், பிரிஸ்பேன், 2017

சராசரியாக எத்தனை இன்னிங்ஸ்களுக்கு ஒருமுறை சதமெடுக்கிறார்கள்?

ஸ்டீவ் ஸ்மித் - 5.0 இன்னிங்ஸ்
சங்கக்காரா - 6.1 இன்னிங்ஸ்
காலிஸ் - 6.2 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் - 6.4 இன்னிங்ஸ்


* ஸ்மித்தின் தற்போதைய பேட்டிங் சராசரி - 61.23. அவருடைய அதிக பேட்டிங் சராசரி இதுதான். டெஸ்ட் வரலாற்றில், 100 இன்னிங்ஸ் விளையாடிய பேட்ஸ்மேன்களில் அதிக சராசரி கொண்ட வீரரும் ஸ்மித் தான் (டான் பிராட்மேன் 80 இன்னிங்ஸ் மட்டும் விளையாடினார். அவருடைய பேட்டிங் சராசரி - 99.94). இதற்குப் பிறகு ஸ்மித் தொடர்ச்சியாக 19 பூஜ்ஜியங்கள் எடுத்தாலும் அவருடைய சராசரி 50-க்கும் கீழே குறையாது!

* ஒரு கேப்டனாக 27 டெஸ்டுகளில் 13 சதங்கள் எடுத்துள்ளார். கேப்டனாக அவருடைய பேட்டிங் சராசரி - 72. 5 டெஸ்டுகளுக்கும் அதிகமாக விளையாடிய கேப்டன்களில் ஸ்மித்தை விடவும் பிராட்மேனுக்குத்தான் அதிக பேட்டிங் சராசரி உண்டு. கேப்டனாக இருந்தபோது பிராட்மேனின் பேட்டிங் சராசரி - 102.

அதிக பேட்டிங் சராசரி (குறைந்தபட்சம் 20 டெஸ்ட் இன்னிங்ஸ்) 

டான் பிராட்மேன் - 99.94 - 80 இன்னிங்ஸ்
வோஜஸ் - 61.87 - 31 இன்னிங்ஸ்
ஸ்மித் - 61.23 - 105 இன்னிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com