Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 328- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 130.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. அதன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனியொருவராக நிலைத்து ஆடி அணியை மீட்டெடுத்தார்.
    பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
    பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 3}ஆவது நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 64, ஷான் மார்ஷ் 44 ரன்களுடன் தொடங்கினர்.
    இதில் ஷான் மார்ஷ் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டுவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பெய்ன் 13, ஸ்டார்க் 6, ஹேஸில்வுட் 6, நாதன் லயன் 9 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். பட் கம்மின்ஸ் மட்டும் 42 ரன்கள் எடுத்தார்.
    இறுதிவரை சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காத கேப்டன் ஸ்மித், 326 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 141 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தில் ஸ்டுவர்ட் பிராட் அதிகபட்சமாக 3, ஆன்டர்சன், மொயீன் அலி தலா 2, கிறிஸ் வோக்ஸ், ஜேக் பால், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
    இங்கிலாந்து- 33/2: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2}ஆவது இன்னிங்ûஸ தொடங்கியுள்ள இங்கிலாந்து சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. மார்க் ஸ்டோன்மேன் 19, ஜோ ரூட் 5 ரன்களுடன் ஆடி வருகின்றனர். முன்னதாக அலாஸ்டர் குக் 7, ஜேம்ஸ் வின்ஸ் 2 ரன்களில் வீழ்ந்தனர். அவர்களின் விக்கெட்டை ஹேஸில்வுட் வீழ்த்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai