Enable Javscript for better performance
உலக மகளிர் குத்துச் சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 2 இந்தியர்கள்- Dinamani

சுடச்சுட

    

    உலக மகளிர் குத்துச் சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 2 இந்தியர்கள்

    By DIN  |   Published on : 26th November 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்தியாவின் நீது, சாக்ஷி சோப்ரா ஆகியோர் தங்களது எடைப் பிரிவல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
    முன்னதாக ஜோதி குலியா ( 51 கிலோ ), சசி சோப்ரா (57 கிலோ) , அன்குஷிதா போரோ (64 கிலோ) ஆகிய இந்தியர்கள் ஏற்கெனவே இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், தற்போது மேலும் 2 வீராங்கனைகள் தங்கத்துக்கான போட்டியில் தடம் பதித்துள்ளனர். இதன்மூலம், இந்தப் போட்டியில் 5 பதக்கங்கள் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது.
    முன்னதாக, 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் இந்தியாவின் நீது, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சீனாவின் யுவான் நீயை எதிர்கொண்டார். முதல் இரு சுற்றுகளில் இருவரும் கடுமையாகத் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பரபரப்பாக நகர்ந்த இந்தப் போட்டியின் கடைசி 3 நிமிடத்தில் அபாரமாக ஆடிய நீது, யுவான் நீயை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இவர், கஜகஸ்தானின் ஜஸிரா யுரக்பாயேவாவை அந்தச் சுற்றில் எதிர்கொள்கிறார்.
    இதேபோல், 54 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் சாக்ஷி சோப்ரா, ஜப்பானின் இரீ சேனாவை வீழ்த்தினார். சாக்ஷியின் வேகமான பாத அசைவு யுக்தி, இந்தப் போட்டியில் அவரது வெற்றிக்கு பெரிதும் உதவியது. சாக்ஷி தனது இறுதிச்சுற்றில் இங்கிலாந்தின் இவி ஜேன் ஸ்மித்தை எதிர்கொள்கிறார்.
    இதனிடையே, +81 கிலோ எடைப் பிரிவில் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை நேஹா யாதவ், அதில் ரஷியாவின் அனஸ்தாஸியா ரைபாக்கிடம் தோல்வியைச் சந்தித்து வெண்கலத்துடன் வெளியேறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai