Enable Javscript for better performance
ஐடபிள்யூஎல் கால்பந்து: பரோடாவை பந்தாடிய சேது- Dinamani

சுடச்சுட

    

    இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேது எஃப்சி அணி 16}0 என்ற கோல் கணக்கில் பரோடா எஃப்ஏ அணியை பந்தாடியது.
    "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளிடையேயான ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் கோலாபூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் மற்றும் 2}ஆவது பாதியில் தலா 8 கோல்களை பதிவு செய்தது சேது அணி.
    மதுரையைச் சேர்ந்த இந்த அணியில், சுமித்ரா ஹாட்ரிக் உள்பட 6 கோல்கள் அடித்தார். வெலானி ஃபெர்னான்டஸ் 3, பூஜா கர்மாகர், நந்தினி ஆகியோர் தலா 2, லெளரா எஸ்டிபெய்ரோ, மணீஷா, கார்திகா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இவர்களில் சுமித்ரா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்.
    சேது எஃப்சி அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 27}ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில விளையாட்டு கவுன்சில் அணியை 
    எதிர்கொள்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai