Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை பந்துவீச்சாளர் டாசன் ஷனகாவிற்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரராக கத்தாரைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் முதாஸ் எஸ்ஸா பார்சிம், சிறந்த தடகள வீராங்கனையாக பெல்ஜியத்தை சேர்ந்த ஹெப்டத்லான் வீராங்கனை நஃபிஸாடு தியாம் தேர்வு செய்யப்பட்டனர்.
    ஆர்ஜென்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியுடனான தனது ஒப்பந்தத்தை வரும் 2021-ஆம் ஆண்டு வரையில் நீட்டித்துள்ளார்.
    சர்வதேச போட்டிகளை ஒருங்கிணைப்பதில் இந்தியா முதல் தர நாடு என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் துணைத் தலைவர் எட்கர் டேனர் கூறினார்.
    பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு 33 வீராங்கனைகளை ஹாக்கி இந்தியா தேர்வு செய்துள்ளது.
    சென்னையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டியின் "ஏ' பிரிவில் ஹிந்துஸ்தான் கிங் பாங்ஸ், மொபி சார்ஜர்ஸ் அணிகளும், "பி' பிரிவில் ஜேப்பியார் ஸ்மாஷர்ஸ், கிரீன் ராக்கர்ஸ் அணிகளும் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai