Enable Javscript for better performance
ரஞ்சி கிரிக்கெட்: பரோடா 254/8- Dinamani

சுடச்சுட

    

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா அணி முதல் நாளில் 87 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.
    குஜராத் மாநிலம் வதோதராவில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா, பேட்டிங் செய்யத் தொடங்கியது. இதில் தொடக்க வீரர் கேதர் தேவ்தர் 17, உடன் வந்த ஆதித்யா வாக்மோத் 19 ரன்களில் வீழ்ந்தனர். பின்னர் வந்த விஷ்ணு சோலங்கி 20, தீபக் ஹூடா 24, மிதேஷ் படேல் 5, அதித் சேத் 2, துருவ் படேல் 10, கார்த்திக் ககாதே 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    ஆட்டநேர முடிவில் ஸ்வப்னில் சிங் 94, ருத்ரேஷ் வகேலா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக தரப்பில் விக்னேஷ், கெளஷிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai