Enable Javscript for better performance
விஜய்-புஜாரா இணை அபாரம்; 2-ஆவது நாளில் இந்தியா ஆதிக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விஜய்-புஜாரா இணை அபாரம்; 2-ஆவது நாளில் இந்தியா ஆதிக்கம்

    By DIN  |   Published on : 26th November 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    spt2

    இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.
    தொடக்க வீரர்களில் ஒருவரான முரளி விஜய் மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில், இலங்கையின் ஸ்கோரை விட 107 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
    இவ்விரு அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. முதல் நாளிலேயே 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணியில், அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57, கருணாரத்னே 51 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அபாரமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
    இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தார்.
    இந்நிலையில், 2-ஆவது நாள் ஆட்டத்தை முரளி விஜயும், சேதேஷ்வர் புஜாராவும் தலா 2 ரன்களுடன் தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாக, அதேவேளையில் அருமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. முரளி விஜய் 112 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் புஜாரா 145 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்தார்.
    தொடர்ந்து நிலைத்த இந்த ஜோடியில், முரளி விஜய் 187 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதம் கண்டார். இது டெஸ்ட் போட்டியில் அவரது 9-ஆவது சதமாகும். எனினும், 221 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 128 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் அவர். ரங்கனா ஹெராத் வீசிய 75-ஆவது ஓவரில் முரளி விஜய் அடித்த பந்து, தில்ருவன் பெரேராவின் கைகளில் கேட்ச்சாக மாறியது. முன்னதாக, விஜய்-புஜாரா ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது.
    முரளி விஜயை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களத்துக்கு வந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த புஜாரா 246 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவரது 13-ஆவது சதமாகும். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கோலி 66 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடக்க, 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
    புஜாரா 121, கோலி 54 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் ஹெராத் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    துளிகள்...

    5 இந்த இன்னிங்ஸில் விஜய்}புஜாரா ஜோடி 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் ரன்கள் மூலம் தொடர்ச்சியாக 4 முறை 100 ரன்களை எட்டிய ஜோடிகள் வரிசையில் விஜய்}புஜாரா இணை 5}ஆவதாக இணைந்துள்ளது. முதல் 4 ஜோடிகள் ஆஸ்திரேலியாவின் சாம் லாக்ஸ்டன்} நீல் ஹார்வே, இந்தியாவின் சஞ்சய் மஞ்ரேகர்}முகமது அஸôருதீன், இங்கிலாந்தின் மார்க் பட்சர்}மார்கஸ் டிரெஸ்கோதிக், பாகிஸ்தானின் யூனிஸ் கான்} முகமது யூசஃப் ஆவர்.

    9 இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 22 முறை பார்ட்னர்ஷிப் சேர்ந்துள்ள விஜய்}புஜாரா ஜோடி, 9}ஆவது முறையாக 100 ரன்களை கடந்துள்ளது. அந்நிய மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் 16 முறை இணைந்துள்ள இந்த ஜோடி, ஒரேயொரு முறை 100 ரன்களை கடந்துள்ளது.

    4 இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப்பில் அதிகமுறை 200 ரன்கள் அடித்த வரிசையில் விஜய்}புஜாரா ஜோடி 4}ஆவது இடத்தில் உள்ளது. முன்னதாக, திராவிட்}சேவாக், திராவிட்}சச்சின், கங்குலி}சச்சின் இணைகள் தலா 4 முறை 200 ரன்கள் அடித்துள்ளது.

    ஸ்கோர் போர்டு

    முதல் இன்னிங்ஸ்

    இலங்கை
    79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 205
    கருணாரத்னே 51, சண்டிமல் 57
    பந்துவீச்சு: அஸ்வின் 4/67, இஷாந்த் சர்மா 3/37
    இந்தியா


    கே.எல்.ராகுல் (பி) கமகே 7 13
    முரளி விஜய் (சி) பெரேரா (பி) ஹெராத் 128 221
    சேதேஷ்வர் புஜாரா நாட் அவுட் 121 284
    விராட் கோலி நாட் அவுட் 54 70
    உதிரிகள் 2 
    மொத்தம் (98 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 312
    விக்கெட் வீழ்ச்சி: 1-7(ராகுல்), 2-216(விஜய்).
    பந்துவீச்சு: லக்மல் 18-2-58-0, கமகே 22-7-47-1, 
    ஹெராத் 24-8-45-1, ஷனகா 13-3-43-0, பெரேரா 21-0-117-0.


    நமக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். ஆனால், 
    ஒரு தொழில்முறை வீரராக எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். நான் அதற்கு பழகிவிட்டேன். அணியில் எனக்கான வாய்ப்பு கிடைக்கும்போது அணிக்கான எனது பங்களிப்பை வழங்க விரும்புகிறேன்.

    - முரளி விஜய்

    சுழற்பந்துவீச்சை கையாள இலங்கை அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், கடந்த 2 ஆண்டுகளாக அத்தகைய பந்துவீச்சை சரியான வகையில் எதிர்கொள்ள இயலாமல் தடுமாறி வருகிறோம். அதிலிருந்து மீள எதிர்காலத்தில் தயாராக வேண்டும். அதற்கான அவகாசத்தை குறிப்பிட இயலாது. 

    - சதீரா சமரவிக்ரமா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai