Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
    முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அவர், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை 21}17, 21}17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
    ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் 6}2 என்ற கணக்கில் முன்னிலை வகித்த சிந்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 7}ஆவது நிமிடத்தில் 11}7 என்ற கணக்கில் முன்னிலையில் சிந்து நீடித்த போதிலும், ரட்சனோக்கின் சில கடினமான ஷாட்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
    முடிவில், 21}17 என்ற கணக்கில் முதல் செட்டை சிந்து தன்வசப்படுத்தினார். பல யுக்திகளைக் கையாண்ட அவர், 21}17 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி வென்றார்.
    இத்துடன் ரட்சனோக்கை 6}ஆவது முறையாக சந்தித்துள்ள சிந்து, தனது 2}ஆவது வெற்றியை அவருக்கெதிராக பதிவு செய்துள்ளார்.
    சிந்து தனது இறுதிச்சுற்றில், உலகின் முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் ஸூ யிங்கை எதிர்கொள்கிறார். டாய் ஸூவை இதுவரை 10 முறை சந்தித்துள்ள சிந்து, அதில் 3 வெற்றிகளையே பதிவு செய்துள்ளார்.
    ஹாங்காங் ஓபனில் கடந்த 1982}ஆம் ஆண்டு இந்தியாவின் பிரகாஷ் படுகோனும், அதன்பிறகு 2010}இல் சாய்னா நெவாலும் பட்டம் வென்றனர். அந்த வரிசையில், சிந்துவும் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai