Enable Javscript for better performance
ஆஷஸ் டெஸ்ட்: வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலியா- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப் பாதையில் விளையாடி வருகிறது.
    2-ஆவது இன்னிங்ஸில் அந்த அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. அணியின் வசம் 10 விக்கெட்டுகளும் உள்ள நிலையில், வெற்றிக்கு 56 ரன்களே தேவைப்படுகிறது. கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அந்த இலக்கை எளிதாக எட்டும் எனத் தெரிகிறது.
    இரு அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 116.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா 130.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இங்கிலாந்து, சனிக்கிழமை முடிவில் 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாள் ஆட்டத்தை ஸ்டோன்மேன் 19, ஜோ ரூட் 5 ரன்களுடன் தொடங்கினர்.
    இதில் ஸ்டோன்மேன் 27, ஜோ ரூட் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான் 4 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் வந்த மொயீன் அலி 40, ஜானி பேர்ஸ்டோவ் 42 ரன்கள் ஸ்கோர் செய்தனர். கிறிஸ் வோக்ஸ் 17, ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஜேக் பால் கடைசி விக்கெட்டாக ஒரு ரன்னுக்கு வீழ்ந்தார்.
    இவ்வாறாக அந்த அணி 71.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், பட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
    இதையடுத்து 170 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியாவில் பேன்கிராஃப்ட் 51, வார்னர் 60 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai