Enable Javscript for better performance
இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா- Dinamani

சுடச்சுட

    
    spt2

    நாகபுரி, நவ. 26: இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கியுள்ள இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை 384 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. இதனால், இப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    முன்னதாக, 3-ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்து, இமாலய ஸ்கோருக்கு அணியை இட்டுச் சென்றார். பேட்டிங்கில் கடைசி ஆர்டரில் களம் கண்ட ரோஹித் சர்மாவும் சதம் அடித்து அதற்கு உறுதுணையாக இருந்தார்.நாகபுரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் சண்டிமல் 57 ரன்கள் அடித்தார். இந்தியாவில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா, சனிக்கிழமை முடிவில் 98 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான முரளி விஜய் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சேதேஷ்வர் புஜாரா சதமும், கேப்டன் கோலி அரைசதமும் கடந்திருந்தனர்.
    இந்நிலையில், 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை புஜாரா 121, கோலி 54 ரன்களுடன் தொடங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தியது. கோலி 130 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார். புஜாரா-கோலி ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், புஜாரா 14 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்த நிலையில், டாசன் ஷனகா பந்துவீச்சில் போல்டானார்.
    மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 125.2 ஓவர்களில் 400 ரன்களை எட்டியிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் புஜாராவை அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    அடுத்து வந்த ரோஹித் சர்மா, கோலியுடன் இணைந்தார். நிதானமாக ஆடிய அவர் 98 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனிடையே, இந்தியாவின் ஸ்கோர் 152.2 ஓவர்களில் 500-ஐ எட்டியது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் கோலி 259 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் இரட்டைச் சதம் கண்டார். அதேபோல் ரோஹித் 160 பந்துகளில் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதமடித்தார். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது.
    கோலி 213 ரன்கள் எடுத்த நிலையில் பெரேரா பந்துவீச்சில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 5 ரன்களில் நடையைக் கட்ட, ரித்திமான் சாஹா களம் புகுந்தார். இவ்வாறாக இந்தியா 610 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. ரோஹித் 102, சாஹா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கையின் பெரேரா 3 விக்கெட்டுகளும், கமகே, ஹெராத், ஷனகா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.
    இலங்கை-21/1: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 405 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை 3-ஆம் நாள் முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 11, திரிமானி 9 ரன்களுடன் ஆடி வருகின்றனர். முன்னதாக, சமரவிக்ரமாவை டக் அவுட் செய்தார் இஷாந்த் சர்மா.

    ஸ்கோர் போர்டு

    முதல் இன்னிங்ஸ்
    இலங்கை
    79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 205
    கருணாரத்னே 51, சண்டிமல் 57
    பந்துவீச்சு: அஸ்வின் 4/67, இஷாந்த் சர்மா 3/37

    இந்தியா

    கே.எல்.ராகுல் (பி) கமகே
    முரளி விஜய் (சி) பெரேரா (பி) ஹெராத்
    சேதேஷ்வர் புஜாரா (பி) ஷனகா
    விராட் கோலி (சி) கருணாரத்னே (பி) பெரேரா
    அஜிங்க்ய ரஹானே (சி) கருணாரத்னே (பி) பெரேரா
    ரோஹித் சர்மா நாட் அவுட் 
    அஸ்வின் (பி) பெரேரா
    ரித்திமான் சாஹா நாட் அவுட் 

    உதிரிகள் 

    மொத்தம் (176.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 610
    விக்கெட் வீழ்ச்சி: 1-7(ராகுல்), 2-216(விஜய்), 3-399(புஜாரா), 4-410(ரஹானே), 5-583(கோலி), 6-597(அஸ்வின்).
    பந்துவீச்சு: லக்மல் 29-2-111-0, கமகே 35-8-97-1, 
    ஹெராத் 39-11-81-1, ஷனகா 26.1-4-103-1, 
    பெரேரா 45-2-202-3, கருணாரத்னே 2-0-8-0.

    2-ஆவது இன்னிங்ஸ்

    இலங்கை
    சமரவிக்ரமா (பி) இஷாந்த்
    கருணாரத்னே நாட் அவுட் 
    லாஹிரு திரிமானி நாட் அவுட் 
    உதிரிகள் 
    மொத்தம் (9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு) 21
    விக்கெட் வீழ்ச்சி: 1-0(சமரவிக்ரமா)
    பந்துவீச்சு: இஷாந்த் 4-1-15-1, அஸ்வின் 4-3-5-0, 
    ஜடேஜா 1-1-0-0.


    துளிகள்...

    5 கேப்டனாக கோலி எட்டியுள்ள 5-ஆவது இரட்டைச் சதம் இதுவாகும். இதன்மூலம் அவர் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்துள்ளார். பிராட்மேன், கிளார்க், ஜேமி ஸ்மித் ஆகியோர் 4 இரட்டைச் சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

    3 இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிகழ்வது இது 3-ஆவது முறையாகும். முன்னதாக 2010-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும், 2007-இல் மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இதுபோல் நிகழ்ந்துள்ளது.

    10 கோலி கேப்டனாக இந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இதுவரை 10 சதங்களை எட்டியுள்ளார். கேப்டன்கள் சதம் விளாசிய பட்டியலில் இது அதிகபட்சமாகும். முன்னதாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (2005-06), ஸ்மித் (2005) ஆகியோர் 9 சதங்கள் அடித்திருந்தனர்.

    5 டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களால் 3 சதங்கள் அடிக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும். முன்னதாக, 2009-இல் கான்பூரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இதுபோன்று நிகழ்ந்துள்ளது.

    12 இந்திய கேப்டன்களில் அதிகபட்சமாக கோலி 12 சதங்கள் விளாசியுள்ளார். முன்னதாக, சுனில் காவஸ்கர் 11 சதங்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai