Enable Javscript for better performance
மகளிர் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கம் வென்றது.
    நீது (48 கிலோ எடைப் பிரிவு), ஜோதி குலியா (51 கிலோ), சாக்ஷி சௌதரி (54 கிலோ), சசி சோப்ரா (57 கிலோ), அங்குஷிதா போரோ (64 கிலோ) ஆகிய வீராங்கனைகள் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றனர்.
    இப்போட்டியில், நேஹா யாதவ் (+81 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகிய இரண்டு இந்தியர்கள் ஏற்கெனவே வெண்கலத்துடன் வெளியேறிய நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7 ஆகியுள்ளது.
    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கஜகஸ்தானின் ஜஸிரா யுரக்பாயேவாவை 5-0 என வீழ்த்தினார் நீது. 
    இதுகுறித்து நீது கூறுகையில், "அரையிறுதியுடன் ஒப்பிடுகையில், இறுதிச்சுற்று எளிதாகவே இருந்தது' என்றார்.
    இதேபோல், ரஷியாவின் எகடெரினா மோல்சோனோவாவை 5-0 என ஜோதி குலியாவும், இங்கிலாந்தின் இவி ஜேன் ஸ்மித்தை 3-2 என சாக்ஷி சௌதரியும் வீழ்த்தி தங்கத்தை தன்வசமாக்கினர். மற்றொரு ஆட்டத்தில், சசி சோப்ரா, 3-2 என்ற கணக்கில் வியத்நாமின் நோக் டு ஹாங்கையும், அங்குஷிதா போரோ 4-1 என ரஷியாவின் டைனிக் எகாடெரினாவையும் வீழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai